அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யாது ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது பாதகமான நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.

189

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட தயாராக வருகின்றன.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் தரப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இது தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளதக தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இடதுசாரி கட்சிகள் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றுகின்றன

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இடதுசாரி கட்சிகள் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யாது தேர்தல் நடாத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றிற்கு அதிகாரத்தை வழங்கக்கூடிய வகையில் அரசியல் அமைப்பு திருத்தப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்யாமல் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அது ஆளும் கட்சிக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

17ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தல், ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளன.

எனவே அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யாது ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது பாதகமான நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

அரசியல் அமைப்பில் திருத்தம் செய்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைய ரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE