நவி.பிள்ளையின் யுத்தக் குற்ற விசாரணை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவு

159

7இலங்கையில் நிகழ்ந்த யுத்தக் குற்றம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில், ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை தயாரிப்பார்கள் என ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரின்போது இவ்வறிக்கை கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கடந்த வாரம் ஜெனீவாவில் ஒன்றுகூடி ஆராய்ந்தும் உள்ளனர்.

 

SHARE