கண்டி – தெல்தெனிய வீதியில் 65 பயணிகளுடன் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்த பஸ்.

164

 

கண்டி – தெல்தெனிய வீதியில் 65 பயணிகளுடன் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்த பஸ்.

10702167_757079537693209_1183788209823301379_nகண்டி – தெல்தெனிய வீதியில் ரம்புக்வெல்ல பகுதியில் இபோச பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்து 64 பேர் காயமடைந்துள்ளனர்.

வேகந்தையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பஸ் 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விக்டோரியா நீர்த்தேகத்துடன் இணைந்த நீர் அற்ற பள்ளமொன்றில் பஸ் கவிழ்ந்துள்ளது.

இவ்விபத்து இன்று பகல் 1.15 அளவில் இடம்பெற்றுள்ளது.

SHARE