பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் இன்று யாழ். ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையை சந்தித்தார்.

180

பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் இன்று யாழ். ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.லோரா டேவிட்ஸ், பிரித்தானிய உயர்த்தானிகராக பதவியேற்ற பின்னர் முதன் முதலாக இன்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் யாழில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது, யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் சந்தித்தார்.

அச்சந்திப்பின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வடபகுதிக்கான விஜயம் மற்றும் இராணுவ பிரசன்னம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

SHARE