விஜய் சிறந்த டான்ஸர், அஜீத் மாஸ் ஹீரோ – சொல்கிறார் லட்சுமி மேனன்

334

 

lakshmi-menon-malayalam-actress-e1311111995194தமிழில் ‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. சிறந்த கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடித்த இவருடைய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது. தற்போது வலம் வரும் முன்னணி நடிகர்களும், இளம் நடிகர்களும் லட்சுமி மேனனுடன் இணைந்து நடிக்க விரும்புகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழ் ஹீரோக்களில் தனக்குப் பிடித்த நடிகர் யார், அவர்கள் எதில் சிறந்தவர்கள் என்று மனம் திறந்து பேசியுள்ளார் லட்சுமி மேனன்.

அவர் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ அஜீத், சிறந்த டான்ஸர் விஜய் என்று கூறியுள்ளார். மேலும் சூர்யாவின் நடிப்பு பிடிக்கும் என்றும் சிம்புவின் ரொமான்ஸ், ஆர்யாவின் உடலமைப்பும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

லட்சுமி மேனன் தற்போது கௌதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய்’, கார்த்தியுடன் ‘கொம்பன்’ படத்திலும் நடித்து வருகிறார். விஷாலுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

ajith Actor Vijay Jilla First Look Posters

 

SHARE