இலங்கையை ஐநா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும்!-சர்வதேச மன்னிப்பு சபை இதனைக் கோரியுள்ளது.

153
imagesஇலங்கையை ஐநா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும்!-சர்வதேச மன்னிப்பு சபை இதனைக் கோரியுள்ளது.
இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுகளை, நியுசிலாந்து அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இதனைக் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நியுசிலாந்து புதிய நிரந்தர அங்கத்தும் இல்லாத நாடாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்பு சபை இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை விடயங்கள் குறித்து பாதுகாப்பு சபை போதுமான அளவில் செயற்படவில்லை.

இந்த நிலைமையை நியுசிலாந்து மாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

War-Crime-1

ltte_sla_meet_02_06_04_26115_435
SHARE