தமிழீழத்தைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும்-இரா. சம்பந்தன்

125

 

Sampanthan_2103231fதமிழீழத்தைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பி.பி.ஸி.க்கு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- 1972ஆம் ஆண்டின் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே, மிகவும் நியாயமாக தமிழீழம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்று கூறியுள்ள சம்பந்தன், ஆனால், அதன் பின்னரான படிப்படியான அரசியல் நிகழ்வுகள் காரணமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள், பிளவுபடாத நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணுவது என்ற நிலைமை எப்போதோ எட்டப்பட்டு விட்டது என்றும் அப்படியிருக்க ஜனாதிபதி இப்போது கூறும் விசயம் சிங்கள மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE