இந்திய ஹாக்கி பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்

134
இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் (வயது60) நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சம்பளப் பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. தனது ராஜினாமா குறித்து அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வழிகாட்டியாக இருந்த வால்ஷ், இந்திய ஹாக்கி அமைப்பின் முடிவெடுக்கும் பாணியுடன் அனுசரித்துப் போவது தனக்கு மிகவும் கடினம் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்திய ஹாக்கி அமைப்பு வீரர்களின் நீண்டகால நன்மைக்காக முடிவுகள் எடுப்பதில்லை என்றும் தனது கடிதத்தில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

வால்ஷின் ஒப்பந்தம் 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டி வரை உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்தது விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது நிபந்தனைகளை ஏற்று புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள இந்திய விளையாட்டு ஆணையம் முன்வந்தால், ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய தயார் என்று டெர்ரி வால்ஷ் அறிவித்திருந்ததார்.

இந்நிலையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றக் கொள்வதாக வால்ஷ் கூறியுள்ளார்.

SHARE