ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

123
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் துபாயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. சுழலையும், ‘ரிவர்ஸ்விங்’கையும் சமாளிப்பது தான் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். என்றாலும் விதிமீறல் பிரச்சினையில் பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சிகரமான விஷயமாகும். ஆஸ்திரேலியாவும் நாதன் லயன், ஸ்டீவ் ஒ கீபே ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை களம் இறக்க உள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் 123 புள்ளிகளுடன் தற்போது 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினால், தென்ஆப்பிரிக்காவை (124 புள்ளி) பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு முன்னேறலாம். அதே சமயம் 1994-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லாத பாகிஸ்தான் அணி அந்த நீண்ட கால சோகத்துக்கு விடை கொடுக்க முயற்சிக்கும்.

இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென் கிரிக்கெட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SHARE