சினேகா வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதனால் பரபரப்பு 

102 சினேகா உல்லால் வீட்டுக்குள் மர்ம மனிதன் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சினேகா உல்லால். மும்பையில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது அவர் வீட்டுக்குள் மர்ம மனிதன் ஒருவர் நுழைய முயன்றார். காவலுக்கு நின்றிருந்த செக்யூரிட்டி அவரை தடுத்தார். ‘சினேகாதான் என்னை வரச் சொன்னார். அதனால்தான் வந்தேன் என்றபடி வீட்டுக்குள் நுழைய முயன்றார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டனர். அவர்கள் மர்ம நபரை விரட்டத் தொடங்கினர். அப்போது அவர், ‘நான் சினேகாவை மணந்து கொண்டேன். அவர்தான் என்னை வரச்சொன்னார் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

 

வீட்டுக்குள் செல்லவும் முயற்சித்தார்.அந்த நேரம்பார்த்து படப்பிடிப்புக்கு சென்றிருந்த சினேகா வீடு திரும்பினார். நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி முதலே எனக்கு ஒரு மர்ம போன் வந்து கொண்டிருக்கிறது. அதில் பேசுபவர் என்னை திருமணம் செய்துகொள். இல்லாவிட்டால் உன்னையும்உன்குடும்பத்தினரையும் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டினார். இதுபற்றி நான் போலீசில் புகார் செய்தேன். அந்த நபர்தான் இவர் என்று நினைக்கிறேன். ஒருவேளை இவர் மனநலம் பாதித்தவராக இருக்கலாம் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்

 

SHARE