ஓகே கண்மணி படம் மூலம் கனிகாவுக்கு மறுவாழ்வு தரும் மணிரத்னம் 

96
கனிகாவுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு தந்திருக்கிறார் மணிரத்னம்.‘பைவ் ஸ்டார், ‘வரலாறு படங்களில் நடித்தவர் கனிகா. தமிழில் தொடர் வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடித்து வந்தார். அங்கும் வாய்ப்பு குறைந்ததையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். மீண்டும் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு வரவே ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவருக்கு ரீ என்ட்ரி வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு தந்திருக்கிறார் மணிரத்னம். ஏற்கனவே மணிரத்னம் தயாரித்த ‘பைவ் ஸ்டார் படத்தில்தான் கனிகா அறிமுகமானார்.

அப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது தான் இயக்கும் படத்தில் கனிகாவுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார் மணிரத்னம். இதுபற்றி கனிகா கூறும்போது,‘மணிரத்னம் சார்தான் என்னை தமிழில் அறிமுகப்படுத்தினார். 11 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கும் படத்தில் நான் நடிப்பது சந்தோஷமான விஷயம். இப்படம் எனக்கு தமிழில் ரீஎன்ட்ரி படமாகவும் அமைந்திருக்கிறது. மலையாளத்தில் தற்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இப்படத்துக்கு பிறகு தமிழிலும் பிஸியாவேன் என எண்ணுகிறேன் என்றார். மணிரத்னம் இயக்கும் படத்துக்கு ‘ஓகே கண்மணி என பெயரிடப்பட உள்ளதாக பட யூனிட்டார் தெரிவிக்கின்றனர்

 

SHARE