கதையில் லாஜிக் இருக்கா? இயக்குனரிடம் கேட்கும் ஹீரோ 

123
இயக்குனர்களிடம் லாஜிக் கேட்டு நடிக்கிறார் விக்ரம் பிரபு.‘கும்கி, ‘அரிமா நம்பி, ‘சிகரம் தொடு படங்களில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு அடுத்து விஜய் இயக்கத்தில் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது,‘விக்ரம் பிரபுவை வைத்து படம் இயக்குகிறேன் என்று எனது அம்மாவிடம் சொன்னபோது நடிகர் திலகத்தின் குடும்பத்தில் நீ படம் செய்வது பெரிய விஷயம் என்றார். இதன் ஷூட்டிங் கேரளாவில் நடந்து வருகிறது. விக்ரம் பிரபுவிடம் காட்சிகளை விளக்கும்போது ‘அதற்கு என்ன லாஜிக் என்று கேட்பார். அதற்கு காரணம் அவர் உதவி  இயக்குனராக பணியாற்றி நடிக்க வந்தவர். அவர் கேட்கும் லாஜிக்கை விவரித்தபிறகுதான் நடிப்பார். ஒரு இயக்குனராக ஏற்கனவே நான் லாஜிக் பார்த்து காட்சி அமைத்திருந்தாலும் அதை ஹீரோவும் கேட்கும்போது காட்சியில் அவர் காட்டும் ஈடுபாடு பொறுப்பை அதிகரிக்கிறது. இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர், ‘நெற்றிக்கண் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த மேனகாவின் மகள். இவ்வாறு விஜய் கூறினார்

 

SHARE