வாஷிங்டன் போஸ்ட் முன்னாள் ஆசிரியர் 93 வயதில் மரணம்

125
பிரபல அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்டின் முன்னாள் ஆசிரியர் பெஞ்சமின் பிரட்லீ. 93 வயதாகும் பெஞ்சமின் இவர் நேற்று தனது வாஷிங்டனில் உள்ள தனது வீட்டில் வைத்து இயற்கை மரணமடைந்தார்.  இவர் ஆசிரியராக இருந்த போதுதான் வாஷிங்டன் போஸ்ட் வாட்டர் கேட் ஊழலை அம்பலப்படுத்தியது .இதனால் 1974 ஆம் ஆண்டு அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ஆட்சியில் இருந்து வீழ்ச்சியடைந்தார். இந்த சம்பவம் உலகப்பிரசித்தி பெற்றது.

பெஞ்சமின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் ஒரு உண்மையான பத்திரிகையாளன் மறைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.

SHARE