ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டன், நெதர்லாந்து கடும் அதிர்ச்சி: சுமந்திரன் கருத்து

160

sumanthiran_CIஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிந்த தடை நீக்க விவகாரம் குறித்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடைநீக்க விவகாரம் முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளில் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக அந்நாடுகளின் அரசுகள் செயல்பட முடியாது.

அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் தலையீடுகள் இன்றி வழங்கப்பட்ட தீர்ப்பாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

SHARE