சமீபத்தில் சில தமிழர்கள், முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், மற்றும் வட்டுவாகல் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். தடைசெய்யப்பட்ட சில பகுதிகளுக்கு இவர்கள் சென்றவேளை அவ்விடம் எங்கிலும் மண்டை ஓடுகள் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தது மட்டுமல்லாது, அவற்றை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

188

anantha-puram-fire3.பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதை பாருங்கள்!            முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் உள்ள சில பாலங்களுக்கு அடியில் உடல்கள் எரிக்கப்பட்டுக் கிடப்பதாக அங்கு சென்று மீண்ட தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள். வட்டுவாகலில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு அடியில் சுமார், 15 உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே பல உடல்கள் எரியூட்டாப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரின் தாக்குதல்களில், கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவகள் உடல்களுக்கு பக்கமாக மரக் குத்திகளைப் போட்டு இராணுவம் எரியூட்டியுள்ளது. குறிப்பாக உடல்களை அழிக்கவும் இவ்வாறு செய்துள்ளனர். மேலும் முள்ளிவாய்க்காலில் இறந்த பலரது உடல்களை இடிந்த பாலங்களுக்கு அடியில் போட்டு எரியூட்டியும் உள்ளனர்.சமீபத்தில் சில தமிழர்கள், முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், மற்றும் வட்டுவாகல் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். தடைசெய்யப்பட்ட சில பகுதிகளுக்கு இவர்கள் சென்றவேளை அவ்விடம் எங்கிலும் மண்டை ஓடுகள் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தது மட்டுமல்லாது, அவற்றை புகைப்படமும் எடுத்துள்ளனர். போர் நடந்தவேளை தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் வெட்டிய பதுங்கு குழிகள் பல காணப்படுவதாகவும், அவற்றில் பல பொறிந்து உள்நோக்கி விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள

அவர்கள், அதனுள் பல மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும் காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர். அவற்றுக்கு அருகாமையில், பல இடங்களில் வெள்ளை நிற சாம்பல் காணப்படுவதாகவும், அவை மனித உடல்களை எரிக்கும்போது மிஞ்சும் சாம்பல் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆங்காங்கே வெடிக்காத, (இல்லையேல் ஏவமுடியாத) ராக்கெட்டுகளும் நிலத்தில் காணப்படுவதாகவும் அறியப்படுகிறது. இலங்கை இராணுவத்தினர் இறுதி நேரத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் முன்னேற ஆர்.பி.ஜி ரக ஏவுகணைகளையே பயன்படுத்தியுள்ளனர். பாரிய அழிவை ஏற்படுத்தவல்ல இவ்வகையான ஏவுகணைகளைப் பயன்படுத்தியே இராணுவம் முன்னேறியுள்ளது.

இந் நிலையிலேயே தாம் கனரக ஆயுதங்களைப் பாவிக்கவில்லை என்று, சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு 2009ம் ஆண்டு இலங்கை அரசு தெரிவித்தது. முள்ளிவாய்க்கால் பகுதிகள் எங்கும், வெடிக்காத மற்றும் ஏவ முடியாத ராக்கெட்டுகள் நிலத்தில் இருப்பதை, நீங்கள் நாம் இணைத்துள்ள படங்களில் காணலாம். தமிழ் மக்களை கொன்று குவித்து, அடையாளம் தெரியாமல் இருக்க அவர்களின் உடல்களை, மறைவிடங்களில் வைத்து மரக்குத்திகளைப் போட்டு எரியூட்டியுள்ளது இலங்கை இராணுவம்.இப் போர் குற்ற ஆதரங்களை, ஐ.நா மனித உரிமை கழகத்துக்கு நாம் அனுப்பி வைத்துள்ளதோடு, பான் கீ மூனைச் சந்திக்கவுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கும் இப் புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE