Redmi Note 5A ஸ்மார்ட்போன் படங்கள் கசிந்தன

சியோமி நிறுவனத்தின் Redmi Note 5A ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Redmi Note 5 மொபைலின் கசிவை தொடர்ந்து நன்கு அறியப்பட்ட சீன லீக்ஸ்டர் ஆன @mmddj_china, Redmi Note 5A ஆகிய ஸ்மார்ட்போனின் சாத்தியமான குறிப்புகளை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த விவரங்களின் அடிப்படையில் Redmi Note 5A ஆனது FT 5435 போக்கால்டெக் (FocalTech) டச்ஸ்க்ரீன் கண்ட்ரோலர் கொண்ட 5.5 அங்குல FHD 1080 B காட்சி இடம்பெறும்.

மேலும் இக்கருவி சியோமி ரெட்மீ நோட் 4 கருவியை போலவே ஸ்னாப்ட்ராகன் 625 எஸ்ஓசி கொண்டு இயங்கும் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB உள்ளடக்க சேமிப்பைக் கொண்டுள்ளது.

Redmi Note 5A மொபைல்கள் தான் இரட்டை பின்புற கமெரா அம்சம் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.

இந்த கருவியின் செல்பி கமெராவை பொறுத்தவரை சாம்சங் SSK5E8 சென்சார் இடம்பெறலாம் என்றும், Redmi Note 5A மொபைலின் பின்பக்கத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.