தேசிய கட்சிகளின் இணைவு முக்கியத்துவத்தை உணர்த்திய ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.

பன்னிப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து செயற்படுவதன் காரணமாகவே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கிவருவதாக குறிப்பிட்டுள்ளார்.