பிள்ளைகளின் பசியை போக்க வெட்டு கத்தியை விற்ற விவசாயியின் அவலம்!

வரட்சி காரணமாக பயிர்கள் அழிந்து போனதால் விவசாயி ஒருவர் தனது பிள்ளைகளின் வயிற்று பசியை போக்க வீட்டில் இருந்த 800 ரூபா பெறுமதியான வெட்டுக் கத்தியை 350 ரூபாவுக்கு விற்பனை செய்த பரிதாபத்திற்குரிய சம்பவம் ஒன்று அனுராதபுரம், விளச்சிய பிரதேசத்தில் நடந்துள்ளது.

கடந்த நான்கு போக பயிர்ச் செய்கையும் வரட்சி காரணடமாக அழிந்துள்ளது. பிள்ளைகளை வாழ வைக்க முடியாத சூழ்நிலையில் விவசாயி தன்னிடம் இருந்த ஒரே பெறுமதியான பொருளான வெட்டுக் கத்தியை விற்றுள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் விவசாயி கத்தியை விற்றுள்ளார்.

இதற்கு முன்னரும் பிறகு தருவதாக கூறி வர்த்தகரிடம் பொருட்களை வாங்கியுள்ளார்.

விவசாயி மீது பரிதாபம் கொண்ட வர்த்தகர் பணத்தை கொடுத்து கத்தியை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

எனினும் விவசாயி கத்தியை எடுத்துச் செல்லாது கடையிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.