தூங்கும் முறைகளும் உங்கள் உடலில் ஏற்பாடு பாதிப்புகளும்

குழந்தையை போல படுப்பது

குழந்தை போல முட்டிகளை மடக்கி படுப்பதனால் கழுத்திற்க்கும் முதுகிற்கும் நல்லதல்ல. பெரும்பாலும் பெண்கள் இந்த வகை தூக்கத்தினை விரும்புவது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவு சில நேரங்களில் பகலில் ஏற்படும் வலியினால் வெளிப்படும். ஆனால் கர்ப்பிணிப்பெண்கள் ஒய்வு எடுக்கும்பொழுது இப்படி சிறிது நேரம் படுத்தாள் நல்லது. குறட்டை விடுபவர்களுக்கும் உகந்தது.

கைகளை முதுகின் மேல்புறம் மடித்துக் கொள்ளுதல்

இந்நிலை முதுகிற்கு மிகவும் நல்லது. ஆனால் தொடர்ந்து இப்படியே படுப்பதால் குறட்டை விடும் பழக்கம் ஏற்படும் மேலும் கை நரம்புகளில் இருந்து வலிகள் உண்டாகலாம்.

வயிற்றை அழுத்தி கொண்டு படுத்தல்

வயிற்றின் மீது படுப்பதால் செரிமானத்திற்கு நல்லது. ஆனால் இந்த முறையில் தலையை பக்க வாட்டில் வைத்து படுத்தால் மூச்சி விடுதலுக்கு சுலபமாக இருக்கும். தொடர்ந்து இப்படி படுத்தலை குறைத்தால் முதுகு வலியை சந்திக்காமல் இருப்பீர்கள்.

வலதுபுறம் திரும்பி படுத்தல்

பக்க வாட்டில் வலதுபுறம் திரும்பி படுப்பது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இடதுபுறமும் வெகுநேரம் திரும்பி படுக்கவும் கூடாது. மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களை இடது பக்கவாட்டில் திரும்பி படுக்க சொல்வார்கள் இதனால் குழந்தைக்கு ரத்த ஓட்டம் செறிவரச் செல்லும்.

பக்கவாட்டில் கைகளை வைத்து படுத்தல்

கைகளை பக்க வாட்டில் படுத்தலால் தண்டு வடம் இயற்கையான முறையில் இருப்பதால் தண்டு வடத்திற்கு நல்லது. காலை வரை இப்படியே நீடித்தால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு முகம் சோர்ந்து காணப்படும்.

பக்கவாட்டில் தலை அணையை வைப்பது

முட்டியை மடக்கி பக்கவாட்டில் தலையணையை வைத்து படுத்தல் மிகவும் நல்லது. இது உங்களுக்கு நல்ல ஓய்வினை தரும். இதுப்போல் முட்டிக்கு கீழ் தலையணையை வைத்து படுப்பதும் நல்லது.