கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் தொடர்பில் பிரித்தானிய பிரஜை வாக்குமூலம்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரித்தானியர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் காணாமல் போயிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க அண்மையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாக பிரித்தானியர் ஒருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ளூர் காற்பந்து கழகம் ஒன்றின் பொறுப்பாளரான மைக் ஹோகன் என்ற குறித்த பிரித்தானியரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரான சூசை என்பவரை தமது கழகத்தில் இணைத்துக்கொள்ள அவர் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .