கோஹ்லி உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள்: மக்கள் விரும்பவில்லை

ஹிந்தி திரைப்பட நடிகரான கமால்ஆர்கான், இந்திய அணியின் தலைவரான கோஹ்லியை தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அங்கு ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, டி20 தொடரை இழந்தது.

இந்நிலையில் ஹிந்தி திரைப்பட நடிகரான கமால்ஆர்கான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 1000 சதவீத மக்கள் இந்திய அணியின் தலைவராக உங்களை பார்க்க விரும்பவில்லை, அதனால் நீங்கள் உங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.

Bro @imVkohli 1000% people don’t want to see you as captain of Indian cricket team. So resign today if you respect 130Cr Indian people.🙏

இதைக் கண்ட கோஹ்லி ரசிகர்கள் கமால்ஆர்கான் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்,

கமால்ஆர்கான், கோஹ்லி குறித்து இது போன்று டுவிட் செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல, கடந்த சில மாதங்களாகவே கோஹ்லி குறித்து அவர் டுவிட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.