என் வாழ்க்கை துணையை விரைவில் சந்திப்பேன்- பிரணீதி சோப்ரா..

118

என் வாழ்க்கை துணைக்கான நபரை விரைவில் சந்திப்பேன் என்று கூறியுள்ளா நடிகை பிரணீதி சோப்ரா. பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை பிரணீதி சோப்ரா. தற்போது ஷாத் அலி இயக்கத்தில், ”கில் தில்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரணீதியுடன் ரன்வீர் சிங், அலி ஜாபர், கோவிந்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் காதல்-கீதல் என்று எதுவும் இல்லாமல் தனித்து இருக்கும் பிரணீதி, விரைவில் தன் வாழ்க்கை துணையை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, என் மனதுக்கு பிடித்தவரை இதுவரை நான் சந்திக்கவில்லை, நீண்டகாலமாக அவரை தேடி வருகிறேன். விரைவில் அவரை சந்திப்பேன் என்று நினைக்கிறேன். தற்போது நான் தனியாக இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது, ஆனாலும் விரைவில் என்னவரை சந்திப்பேன் என்றார். மேலும் கில் தில் படத்தில், போலியான வாழ்க்கையையும், பணக்கார பெண்ணாகவும் நடிக்கிறேன். இருந்தாலும் இப்படத்தில் என்னை பார்ப்பவர்கள் பக்கத்துவீட்டு பெண் போன்று பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.

 

SHARE