மாவீரர் நாள் தமிழர்களிற்கு பொதுவானது! மாவீரர் விழாவை யாரும் எங்கும் நடத்தலாம் (Photos, Video)

130

maaveerar_naal_kooddam-3-610x4062009 இல் முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கபட்ட பின்பு தாயத்தில் மாவீரர் நாள் பொதுமக்களால் பொது இடங்களில் அனுஷ்டிப்பது என்பது இயலாத விடயமானது. இன்று தாயகத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்பது பெரிய சவாலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளில் மாவீரரை கௌரவிக்கும் உரிமை போராட்டத்தின் பால் அக்கறையாய் இருந்த, பங்களிப்புச் செய்த, தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த சகல தமிழர்களுக்கும் உண்டு என கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற மாவீரர் நாள் தொடர்பான கலந்துரையாடலில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.

தாயகப் போராட்டத்திற்கு உறுதுணையாக 2009ம் ஆண்டு வரை இருந்த அமைப்புக்கு மாத்திரம் தான் அந்த உரிமை உண்டு மற்றவர்களுக்கு இல்லை என்று இப்போது ஒரு சிலர் மாவீரர் நாளை அவமதிக்கிறார்கள். மாவீரர்களின் அர்ப்பணிப்பைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.

ஆனால் மாவீரர் நினைவு நாள் எல்லோருக்கும் பொதுவானது. குறிப்பாக மாவீரர்களை ஈன்று வந்த பெற்றோரும், மாவீரர்களின் இரத்த உறவுகளும் இவ்வாறான கொச்சைப்படுத்தல்களை இனங்கண்டு, மாவீரர்களை கார்த்திகை 27 மாவீரர் நாளில் தூய்மையாக வழிபட வழியேற்படுத்த வேண்டும்.

இதற்காகவே நாங்கள் ரொறன்ரோ மேற்கில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். கடந்த காலங்களில் பல இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டதை போன்று இனிவரும் காலங்களிலும் மாவீரர் வழிபாடு இடம்பெறுவதற்காகவே நாங்கள் இதனைச் செய்துள்ளோம்.

அதேவேளை கனடா வாழ் தமிழ் மக்களின் முன் ஒரு சில உண்மைகளை முன்வைக்க விரும்புகின்றோம். கனடாவிலுள்ள தேசியத்தின் இருப்புக்கள், சொத்துக்களை தம்மகத்தில் வைத்திருக்கவும் அவற்றைத் தங்களுடைய தனிப்பட்ட சொத்துக்களாக மாற்றவும் பலரும் முனைந்து வருகின்றனர்.

இந்தத் தேசிய சொத்துக்களால் முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்பு பாதிக்கப்பட்ட போராளிகளுக்கோ, போராளி குடும்பங்களுக்கோ, பொது மக்களுக்கோ எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களின் நோக்கவும் முழுக் கவனமும் தமது மேலாண்மையை தக்க வைப்பதில் தான் இருந்தது. குறைந்த பட்சம் தேசிய சொத்துக்கள் தனியார் மயமாக்கப்பட்ட துரோகத்தைத் தானும் தவித்திருக்கலாம்.

தேசியச் சொத்துக்கள் பல மில்லியன் டொலர்களாக இருந்தும் அவை பற்றிய கணிப்பீடோ, கணக்கீடோ வெளிக்காட்டப்படுவதில்லை. கணக்கு வழக்குகள் பல ஆண்டுகளாக யாருக்கும் காட்டப்படுவதில்லை. இதுவரை எத்தனையோ சொத்துக்கள் அந்த அமைப்பின் கீழ் பொருள், பணம் ஈட்டிக் கொண்டு இருக்கின்றன. யாருக்குமே கணக்கு வழக்கு எதுவுமே தெரியாது.

இந்த முயற்சிகளிற்கு தடைபோட மாவீரர்கள் உயிர் அர்ப்பணிப்போடு பெறப்பட்ட சொத்துக்கள் ஒரு பொது நன்னம்பிக்கை நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் பெறப்படும் வருமானங்கள் தாயக மக்களின் மாவீரர்களின் வழித்தோன்றல்களிற்குச் சேர வேண்டுமென கடந்த மூன்று வருடங்களாகக் கோரிக்கை விடுந்து வந்தோம்.

ஆனால் அவர்களோ இருக்கின்ற சொத்துக்களை உறுதி செய்யவும், தமிழுணர்வுள்ள தொண்டர்களை தம்மோடு வைத்துக் கொள்ளவும் விரைவில் போராடும் நிலை மீண்டும் ஏற்படும் என்ற பொய்யைக் கூறி மாவீரர்களின் நோக்கங்களிற்குக் களங்கம் கற்பிக்கின்றனர்.

2009ம் ஆண்டு ஈழப்போராட்டத்தின் முடிவிற்கு காரணமான ஒரு சிலரே எந்த வழிகாட்டலும் இன்றி தமக்குத் தெரிந்த குழப்பங்களைச் செய்து வருகின்றனர். 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமாக எதிர்த்தார்கள். சம்பந்தன் வேண்டாம் என்று பிரிவினை வாதம் விதைத்தார்கள். பல இளைஞர்களையும் இன்றைக்கும் தவறான வழியில் வழிநடத்திச் செல்கின்றார்கள். எமது இனத்திடையே மோதலை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கிறார்கள்.

அதுபோலவே தேசியத் தலைவரின் விருப்பங்களாக போராட்டங்கள் மாற்று வடிவங்கள் பெற்று, உருவாக்க முற்பட்டதைத் தடுத்தார்கள். கனடாவில் ஏற்படுத்தப்பட்ட நாடுகடந்த அரசைப் பிளவு படுத்தினார்கள். இவ்வாறு இவர்கள் மாவீரர்களின் கனவுகளிற்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர்.

எனவே மாவீரர்களை தூய மனதோடு, அப்பழுக்கற்ற அன்போடு வணங்குவதற்கும் பூசிப்பதற்காகவுமாக நாங்கள் ரொறன்றோ மேற்கில் உண்மையான, அர்ப்பணிப்போடு போராடிய அந்த உள்ளங்கள் சார்பாக ஏற்படுத்துகிறோம் எனத் தெரிவித்தனர்.

maaveerar_naal_kooddam (1)

maaveerar_naal_kooddam (2)

maaveerar_naal_kooddam (3)

maaveerar_naal_kooddam (4)

maaveerar_naal_kooddam (5)

SHARE