வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் துறைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

91

சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற 2015ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் கைத்தொழில் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மேம்பாட்டிற்காக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 2020ம் ஆண்டு 20 பில்லியன் வேலைத்திட்டங்களாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கான விசேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல பொலிஸார், ஆசிரியர்கள் அவர்களுடைய தொழில் மேம்பாட்டிற்காக பல சலுகைகள் வழங்கப்படவிருக்கின்றது. விவசாய துறையைப் பொறுத்தவரையில் விதைநெல் 40ரூபாய் கொடுத்து வாங்குவதற்கான திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான உரங்கள் 350ரூபாய்க்கு வழங்குவதற்கான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. விவசாயத்திற்குத் தேவையான பொருட்கள் என்பவற்றை குறைந்த விலையில் மக்கள் பெறக்கூடிய வகையில் அதற்கான திட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. பால் உற்பத்தி செய்பவர்களுக்கான சலுகைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக பால் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடியதாகவிருக்கும். ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகவும், இறக்குமதியினை குறைப்பதற்கான திட்டமாகவும் இந்த வரவுசெலவுத் திட்டம் அமையவிருக்கிறது. இந்த வரவுசெலவுத் திட்டத்திலே ஆக்கபூர்வமான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

SHARE