‘கத்தி’ படம் தெலுங்கில் டப்பிங்செய்வதற்கு விரும்பாத விஜய் …

118

தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்திற்கு அடுத்து தற்போது தென்னிந்தியத் திரையுலகில் புகழ் பெற்று வருபவர் விஜய் மட்டுமே என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்து வெளிவரும் படங்கள்தான் தமிழ்நாடு தவிர, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன என அவர்கள் சொல்கிறார்கள். இதை சமீபத்தில் வெளியான ‘கத்தி’ படமும் நிரூபித்திருக்கிறதாம். விஜய்க்கு தெலுங்குத் திரையுலகில் மட்டும் இன்னும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைக்கவில்லை. சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரின் தமிழ்ப் படங்கள் டப்பிங் செய்யப்பட்டு அங்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் விஜய்க்கு மட்டும் ஆந்திரா, தெலுங்கானாவில் இன்னும் வரவேற்பு கிடைக்காமலே இருக்கிறது.

‘கத்தி’ படத்தை டப்பிங் செய்து அங்கு வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில் தமிழுக்குக் கடைத்த வரவேற்பைப் பார்த்து, படத்தை தெலுங்கில் வாங்கியவர் டப்பிங் செய்து வெளியிடாமல் நேரடித் தெலுங்கப் படமாகவே தயாரித்து வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாணுக்கு படத்தை போட்டுக் காட்டவும் முடிவு செய்திருக்கிறார்கள். அநேகமாக பவன் கல்யாண் இன்று படத்தைப் பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பிடித்து பச்சைக் கொடி காட்டிவிட்டால் படம் தெலுங்கில் கண்டிப்பாக ரீமேக் ஆகும் என்கிறார்கள்.

இதனிடையே படத்தை ரீமேக் செய்து வெளியிடுவதை விஜய் விரும்பவில்லையாம். ஏ.ஆர்.முருகதாஸ் அங்கு ஏற்கெனவே பிரபலமானவர் என்பதால் ‘கத்தி’ படம் தெலுங்கில் டப்பிங் படமாக வெளிவந்தால் தன்னால் அங்கும் காலூன்ற முடியும் என விஜய் நினைக்கிறாராம். எந்த ஹீரோவின் முடிவு ஜெயிக்கும் என்பது ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.

 

SHARE