ஐந்து தமிழக மீனவர்களையும் காப்பாற்றுங்கள்: மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

104
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிர்களை காக்க இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் இது தொடர்பில் கடிதம் ஒன்றை இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.

அதில், போதைவஸ்து குற்றச்சாட்டின் பேரில் ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டமையை அடுத்து தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் உண்மையில் அப்பாவிகள், இந்தநிலையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தவிடயத்தை உயர்மட்டத்தில் எடுத்துச் சென்று தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை காப்பாற்றுமாறு பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.

இதற்காக இந்தியப் பிரதமர் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்துக்கு உரிய பணிப்புரைகளை விடுக்கவேண்டும் என்றும் முதல்வர் கேட்டுள்ளார்.

இந்தியாவுக்கான துணை உயர்ஸ்தானிகராக அனுஷா சிவராஜா நியமிப்பு

இந்தியாவின் சென்னை நகரில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தின் துணை உயர்ஸ்தானிகராக அனுஷா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுஷா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராகவும் அக்கட்சியில் பணியாற்றியுள்ளார்.

கட்சியில் இருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு கால்நடை அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அண்மையில் சினமன் கிரேன்ட் ஹொட்டலில் நடைபெற்றது.

அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான துணை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அனுஷா சிவராஜா மத்திய மாகாண கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszAQVKXkx3.html#sthash.4qKgB4Up.dpuf

SHARE