அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்-தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை

161

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை கொழும்பு – டுப்ளிகேன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சிறு காயங்களுக்கு இலக்கான மாலக சில்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

SHARE