40 அடி வரை மண்ணுக்குள் புதைந்த வீடுகள்

155
கொஸ்லந்தை மிரியபெத்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவில் காணாமல்போனோரை தேடும் பணிகள், மீட்புப் பணிகளில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 192 பேர் காணாமற் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரி வித்தது. சீரற்ற காலநிலைக்கு மத்தியி லும் நேற்று முன்தினம் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் சடலங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எனினும் பெண்கள் அணியக் கூடிய பலவகையான ஆபரணங்கள் மீட்கப் பட்டிரு ப்பதாகவும் தெரியவந்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை தொடருவதனால் மீட்புப் பணிகளை முழுமையாக முன்னெடுப்பதில் பாரிய சிரமங் கள் ஏற்பட்டிருந்தன. அப்பகுதியில் தொடர்ந்தும் மண்மேடுகள் சரிந்த வண்ணம் காணப்படுகின்றன. அபாயகரமான சூழ் நிலைக்கு மத்தியிலேயே முப்படையின ரும் பொலிஸாரும் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் சம்வம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட வருகை தருவது மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்கு பாரிய நெருக்கடியை தோற்றுவித்தது. சுமார் 40, 50 அடி உயரங்களுக்கு மண்மேடுகள் வீடுகளை மூடிக் காணப்படுவதனால் மீட்பு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான பாதையை உருவாக்குவதே சிக்கலாக அமைந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.


எனவே பாதையை சீர்செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதுடன், சடலங்களை இனங்கண்டு கொள்வதற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மண்சரிவு தொடர்ந்தும் சிறியளவில் அப்பிரதேசத்தில் இடம்பெற்று வருவதனால் மண்ணை அகழ்ந்து இன்னுமொரு இடத்தில் போட முடியாத இக்கட்டான சூழ்நிலையொன்று அங்கு உருவாகியுள்ளது. அப்பிரதேசம் முழுவதும் சேறு நிறைந்துக் காணப்படுவதனால் மீட்பில் பாரிய மந்தகதி ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் பணிப்புரைக்கமை இராணுவ கமாண்டோ மற்றும் விசேட படைப் பிரிவினர், மணல் மேட்டில் பணியாற்றக் கூடிய நிபுணத்துவம் பெற்றோர் நேற்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மண் அகழ்விற்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து பாரிய ரக இயந்திரங்களும் கொஸ்லந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தெனவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் மீளக்குடியமர்த் துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் இராணுவம் முன்னெடுத்து வருகின்றது.

சம்பவத்தை தொடர்ந்து, மீரியபெத்த தோட்டத்தைச் சுற்றி ஏனைய தோட்டங் களைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பின் நிமித்தம் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு ள்ளனர்.சுமார் 243 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் இரண்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனவென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது. இடப்பெயர்ந்தவர்களுள் சுமார் 580 பேர் கொஸ்லந்த கணேச மஹா வித்தியாலயத் திலும் 315 பேர் பூனாகல மஹா வித்தியா லயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.Meeriabetta-LandslideMeeriabetta-Landslide-01Meeriabetta-Landslide-02Meeriabetta-Landslide-03Meeriabetta-Landslide-04PMeeriabetta-Landslide-06Meeriabetta-Landslide-07Meeriabetta-Landslide-08Meeriabetta-Landslide-09

 

 

 

SHARE