ரஜினி-கமல் ரசிகர்கள் மோதல்

107

தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி-கமல் ரசிகர்கள் என இரண்டு வகையாக மக்கள் பிரிந்து இருந்தனர். பின் அவர்கள் ஒரே மேடையில் சந்திப்பது, இவரை அவர் புகழ்ந்து பேசுவது என ரசிகர்களிடம் உள்ள ஈகோவை நீக்கினர்.

ஆனால், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் ரசிகர்களுக்குள் மோதல் உருவாகியுள்ளது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு தமிழகம் முழுவதும் போஸ்டர் மற்றும் பேனர் அடித்து வருகின்றனர்.

இதில் ‘ நடிகர்களின் முதல்வர்’ என்று குறிப்பிட்டு உள்ளனர். இதனால் இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் கோபத்துடன் கடந்து செல்கின்றனர். லிங்கா படத்திற்காக தற்போதே பேனர் வேலைகளில் ரஜினி ரசிகர்கள் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

 

SHARE