வேகத்தில் மிரட்டும் மலிங்கா: சுழலில் அசத்தும் ஹேரத்

127
உலகின் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களான மலிங்கா, ஹேரத் இடம்பெற்றுள்ளனர்.கடந்த ஒரு வருடகாலமாக மேற்கொண்ட கணிப்பின் அடிப்படையில், அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத், கிரிக்கெட் பத்திரிக்கை ஒன்றிற்காக இந்தப் பட்டியலை கொடுத்துள்ளார்.

இதில் அவுஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் எண்டர்சன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். இலங்கையின் ரங்கன ஹேரத் நான்காம் இடத்திலும், லசித் மலிங்க ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மெக்ராத், உலகக்கிண்ண தொடரில் லசித் மலிங்க பலம் வாய்ந்தவராக செயல்படுவார் என்றும், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வெற்றிடத்தை ரங்கன ஹேரத் நிரப்புயுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE