சுறாவுடன் செல்ஃபி! மிரளவைத்த புகைப்படக்காரர்

102
மெக்சிகோ நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுறா மீனுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார்.சமீபத்தில் சீனாவின் ஹாங்காங்(Hong kong)மாகாணத்தில் உள்ள வானாளவிய கட்டிடம் ஒன்றில் மூவர் சேர்ந்து செல்ஃபி எடுத்த புகைப்படம் உலகையே உலுக்கியது.

இதேபோல் தற்போது மற்றொரு பயங்கரமான செல்ஃபி புகைப்படத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பீட்டர்(Peter Age-59) என்ற புகைப்படக்காரர் வெளியிட்டுள்ளார்.

வனத்துறை புகைப்படக்கலைஞரான இவர், கடலின் அடியில் உள்ள இரும்பு குகைக்கு சென்று, பிறகு குகையின் வெளியில் தன் தலையை சாய்த்து அங்குள்ள வெள்ளை நிற ராட்சத சுறாவுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

இதுகுறித்து பீட்டர் கூறுகையில், நான் சுறாக்களுடன் பல புகைப்படங்களை எடுத்துள்ளேன் என்றும் சுறாமீன்கள் மனிதர்களை உண்ணாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்தி

SHARE