புலனாய்வினரால் தேடப்படும் சன் மாஸ்டர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு ஆலோசகர்,ஆகவும் மனிதவுரிமை செயற்பாட்டாளர் என்றும் பல்வேறு பதவிகளில் தான் அங்கம் வகிப்பவராகவும் மக்களிடையே பகிர்ந்துகொள்வது வழக்கம்.

233

003கடந்த இரு வார காலங்களாக இலங்கை இராணுவப் புலனாய்வினரால் அலவ் பிள்ளை விஜேந்திரகுமார் எனப்படும் சன் மாஸ்ரர் தேடப்பட்டு வருவதாக பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இவருக்கும், இராணுவப் புலனாய்வினருக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக சன் மாஸ்ரரை இராணுவத்தினர் தேடவேண்டும் என்று பார்க்கின்றபொழுது, இவர் ஏற்கனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தீவிர ரசிகனாகவும், உறுப்பினராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

001தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் இவரே முன்னின்று செயற்பட்டவராவார். குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய தொலைபேசிகளுடாக தொடர்புகைள வைத்திருந்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இவருடன் நெருக்கமான உறவினை பேணிவந்தனர்.

sandastarஇவர் தன்னை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு ஆலோசகர், மனிதவுரிமை செயற்பாட்டாளர் என்றும் பல்வேறு பதவிகளில் தான் அங்கம் வகிப்பவராகவும் மக்களிடையே பகிர்ந்துகொள்வது வழக்கம். ஆனால் இவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள பலர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும், ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துவதற்கு ஒரு கைப்பொம்மையாகவும் குறிப்பிட்ட காலம் இவரை செயற்படுத்திவந்தனர். இவருடைய செயற்பாடுகள் புலனாய்வுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் இவரில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பலர் பல ஆண்டுகளின் பின்னர் அவருடைய தொடர்பினை துண்டித்துக்கொண்டனர்.

ஆனால் இவருடைய செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சார்ந்ததாகவே அமையப்பெற்றிருந்தது. இவர் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலும் காணாமற்போனோர் தொடர்பிலும் தகவல்களை திரட்டியது உண்மைதான். ஆனால் இதனை திரட்டி ஐ.நா சபையிடம் கையளித்தாரா? இல்லையா? என்பது மறைக்கப்பட்ட விடயமாகும். காணாமற்போனோரை கண்டறியும் விதமாக ஒவ்வொரு மட்டத்திலும் இருவர் இவரால் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் பலர் இந்த சன் மாஸ்ரருடன் தொலைபேசியில் கலந்துரையாடிக்கொள்வர். இவையணைத்தையும் அவ்வாறே பதிவுசெய்து புலனாய்வினரிடம் வழங்குவதாகவும், சன் மாஸ்ரருடன் உரையாடும் விடயங்கள் அனைத்தும் அடுத்த நிமிடத்திலே அனைவரும் அறிந்துகொள்வதாகவும், இவற்றை அவதானித்துவந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இவரை ஓரங்கட்ட ஆரம்பித்தனர்.

002

இவ்வாறான நிலையில் தான் சன் மாஸ்ரர் தலைமறைவானதாகவும், இராணுவப் புலனாய்வினரால் தேடப்பட்டு வருபவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது. இவரைக்கொண்டு இராணுவப் புலனாய்வினர் தமிழ்மக்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமனற் உறுப்பினர்களை விடவும், வடமாகாணசபை அமைச்சர்களிடமும், உறுப்பினர்களிடமும், தமிழ் மக்களுடனும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடனும் சன் மாஸ்ரர் நெருக்கமான உறவினை வைத்திருந்தும் பலவேலைத்திட்டங்களை மேற்கொண்டார் என்பதும் பலருக்கும் தற்பொழுது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளது. இவரின் தலைமறைவிற்குப் பின் ஒளிந்திருக்கும் விடயங்கள் என்ன?

yyyyyyyyyyyyyyy

 

தொடரும்…

SHARE