ஐபோன் ஆப் தயாரித்து சாதனை படைத்த மூதாட்டி

ஜப்பானை சேர்ந்த மஸாகோ வகாமியா என்ற 82 வயது மூதாட்டி ஆப்பிள் ஐபோனுக்கு ஆப் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

இன்றைய இளசுகளின் கைகளை அலங்கரிக்கும் ஸ்மார்ட்போனில் எண்ணற்ற ஆப்கள் உள்ளன.

ஆனால் முதியோர்களுக்கு தொழில்நுட்பவிடயத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை.

இதனால் தானாகவே முன்வந்து ஆப்பை உருவாக்கி சாதித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த மஸாகோ வகாமியா.

இணையதளத்தின் உதவியுடன் கோடிங் எழுதக் கற்றுக்கொண்டவர், ஹினாடன் என்ற ஆப்பை உருவாக்கியுள்ளார்.

இந்த ஆப் ஜப்பானில் வெகுபிரபலமடைய, சமீபத்தில் நடந்த ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டிலும் வகாமியா கலந்து கொண்டுள்ளார்.

முதியவர்களின் நினைவுத்திறமை பரிசோதிக்கும் இந்த பிரத்யேக ஆப் இதுவரையிலும் 42,000 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.