விரைவில் அறிமுகமாகின்றது கூகுளின் புதிய Android 8.0 Oreo

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் மொபைல் சாதனங்களுக்கான அன்ரோயிட் இயங்குதளத்தினையும் வடிவமைத்து அறிமுகம் செய்கின்றது.

இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்புக்கள் தொடர்ச்சியாக வெளிவருகின்ற அதேவேளை இவற்றிற்கு உணவுப் பண்டங்களின் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது எட்டாவது பதிப்பினை அறிமுகம் செய்யக்காத்திருக்கின்றது.

இதற்கு Android 8.0 Oreo எனப் பெயரிடப்பட்டுள்ளது, விரைவில் இடம்பெறவுள்ள Google I/O மநாட்டில் இப் புதிய பதிப்பு உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

இதேவேளை புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள Pixel ஸ்மார்ட் கைப்பேசிகள், Nexus 5X, Nexus 6P மற்றும் ஏனைய புதிய கைப்பேசிகளிலும் இவ் இயங்குதளப் பதிப்பு தரப்படவுள்ளது.