சாவகச்சேரியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு! கொழும்பு பெண் உட்பட 6 பேர் கைது

145
யாழ்.சாவகச்சேரி பகுதியில் விருந்தினர் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு  விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட அறுவரை நேற்று புதன்கிழமை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்து, விபசாரத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த பெண், பெண்ணை விபசாரத்திற்காக அழைத்து வந்தவர், விடுதி முகாமையாளர், விடுதி உதவியாளர் மற்றும் இரண்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரையே கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சாவகச்சேரி பகுதியிலுள்ள விடுதியொன்றில் விபசார நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரத்தின் கவனத்திற்கு நேற்று புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, விருந்தினர் விடுதியில் சோதனை நடத்துமாறு கொடிகாமம் பொலிஸாரிற்கு நீதவான் உத்தரவிட்டார்

அதற்கமைய விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்த கொடிகாமம் பொலிஸார் மேற்படி நபர்களை கைது செய்தனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszBTaKXgs4.html#sthash.oxSn7ASU.dpuf

SHARE