குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் இன்றைய தினம் (29.08.2017) காலை 10.00 மணியளவில் விஜயம் செய்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வாக்குறுதி வழங்கியதை அடுத்து சுகாதார தொண்டர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் தமக்கான தீர்வினைப் பெற்றுத்தராவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம் என சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.