உடலின் ஆரோக்கியத்திற்கு 3 வகையான ஆயுர்வேத எண்ணெய் குளியல்…

உடலின் ஆரோக்கியத்திற்கு 3 வகையான ஆயுர்வேத எண்ணெய் குளியல்...

ஆயுர்வேத சடங்குகளில் நல்லெண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.அப்யங்கா என்று அழைக்கப்படும் ஒரு வகை சிகிச்சைக்கு ஒரு சரியான தேர்வு இந்த நல்லெண்ணெய்.

அப்யங்கா என்பது சுயமாக செய்து கொள்ளும் ஒரு வகை மசாஜ். இது உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் அமைதிப்படுத்தும் ஒரு பயிற்சி.

இதற்கு பயன்படுத்தும் போது இந்த எண்ணெய் இளம் சூட்டில் இருக்க வேண்டும்.

இந்த வகை மசாஜை நாம் தொடர்ந்து செய்து கொள்ளும்போது, உடலில் திசுக்களுக்கும் தசைகளுக்கும் உராய்வை ஏற்படுத்துகின்றன.இதனால் உடலின் விரி திறன் அதிகரிக்கிறது. ஆயுள் மற்றும் வீரியம் கூடுகிறது.

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் நோயை தடுக்கவும் செய்கிறது. குணமாக்கவும் செய்கிறது.

ஆயுர்வேதத்தில் இந்த எண்ணெய்யை குளிரூட்டும் எண்ணெய் என்று கூறுகின்றனர்.இது நச்சுகளை வெளியாக்கி உடலை சுத்தமாக்குகிறது. நோயெதிர்ப்பு மற்றும் செரிமான மண்டலங்களின் ஆற்றல் அதிகரிக்கிறது.

பித்தத்தை தொலைக்கும் தன்மை இந்த எண்ணெய்யில் அதிகம் உள்ளது. பித்தத்தால் ஏற்படும் சரும நோய்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். உடலில் சூடு அதிகமாகும் போது தடிப்புகள் மற்றும் கட்டிகள் தோன்றும்.

சில துளிகள் வேப்பெண்ணெய் உடலில் உள்ள சூட்டை தணிக்கும். நுண் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும். தொடர்ந்து இந்த எண்ணெயில் மசாஜ் செய்வது உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

ரசாயன முகப்பூச்சுகளுக்கு மாற்றாக இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

பிராமி தேங்காய் எண்ணெய்

வல்லாரை மற்றும் நீர்பிரம்மி ஆகியவற்றை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையுடன் சேர்க்கும்போது உண்டாகும் கலவைதான் இந்த எண்ணெய்.

இது ஒரு குளிர்ச்சியான எண்ணெய்.

மன வலிமைக்கும், தியானத்திற்கும் இது சிறந்த எண்ணெயாகும். மனதை தூய்மையாக்கி அமைதி படுத்துகிறது.உறங்குவதற்கு முன் தலையில் இதை மசாஜ் செய்வதால், மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.

தூக்கமின்மையை இது அதிக அளவில் குறைக்கிறது. கவனத்தையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்க வாரத்தில் 3 முறை இதனை பயன் படுத்தலாம்.

advertisement

மன அமைதியை தருவதால் அழுத்தம் குறையும்.

இதனால் மனித உறவுகள் பலப்படும் மற்றும் வேலை திறன் அதிகரிக்கும்.