சினிமாவையும் தாண்டி அகரம் அறக்கட்டளை அமைக்க வைக்க உதவியது இவர்கள் தான்..!

நடிகர் சூர்யா, 1997ம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் நாயகனாக அறிமகமானார். இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் சூர்யா. சூர்யா 20 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு சூர்யா நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவர் கூறியதாவது: எனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பது தான். உங்களின் கைத்தட்டல் உத்வேகத்தையும், பாராட்டுகள் எனது தரத்தை உயர்த்தவும் உதவின. நீங்கள் தவறு என்று சுட்டிக்காட்டிய விஷயங்கள் என்னை இன்னும் கற்க உதவின.

சினிமாவையும் தாண்டி அகரம் அறக்கட்டளை அமைக்க வைக்க உதவியது. இவை எல்லாவற்றையும் விட உங்களது அன்பு எனது இன்ஜினை வேகமாக இயக்க முக்கிய காரணமாக அமைந்தது. என்னுடைய இந்த 20 ஆண்டு பயணத்தில் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் நான் பல மைல்கள் கடந்து பயணிக்க வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் நன்றி என்று தாழ்மையாக கூறினார் சூர்யா.