மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு 1000 மில்லியன் ரூபா கொடுத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகொண்டார். ஆகவே இந்த வெற்றியை மஹிந்தவின் வெற்றியாகக் கொள்ள முடியாது. மாறாக பிரபாகரனின் வெற்றி-அசாத் சாலி

144

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளதால், அவர்களின் கருத்துக் குறித்தும் ஜக்கிய தேசியக் கட்சி செவிசாய்க்க வேண்டும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை அலுவலகத்தில் வைத்து வணங்க வேண்டும். 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு 1000 மில்லியன் ரூபா கொடுத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகொண்டார். ஆகவே இந்த வெற்றியை மஹிந்தவின் வெற்றியாகக் கொள்ள முடியாது. மாறாக பிரபாகரனின் வெற்றியாகத் தான் கொள்ளமுடியும்.

தற்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. இந்த நிலையில் ஜக்கிய தேசிய கட்சியிலிருந்து மங்கள சமரவீரவை தம் பக்கம் இழுப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளது.காரணம் தமிழ் மக்களின் பெரும்பான்மையான மக்கள் கூட்டமைப்பின் பக்கத்தில் நிற்கின்றனர். ஆகவே அவர்களின் கருத்துக்கள் குறித்தும் ஜக்கிய தேசியக் கட்சி செவிசாய்க்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE