ஐ.நாவின் புதிய அறிக்கை; சிக்கலில் மைத்திரி…

 

    ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை மீறி இலங்கை வடகொரியாவுடன் பொருளாதார தொடர்புகளை பேணியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடகொரியாவிடம் இருந்து இரும்பு, உருக்கு உள்ளிட்ட பொருட்களை இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இறக்குமதி செய்துள்ளன.

    கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 204 மில்லியன் டொலர்களுக்கு இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத் தொடர் விஜயத்தின் போது ஐ.நா தரப்பினால் கடுமையான அழுத்தங்கள் மற்றும் கடுமையான கேள்விகள் தொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபைக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், நடப்பு அரசாங்கத்தில் அது சரி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வடகொரிய விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத் தொடர் விஜயத்தின் போது ஐ.நா தரப்பினால் கடுமையான அழுத்தங்கள் மற்றும் கடுமையான கேள்விகள் தொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபைக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், நடப்பு அரசாங்கத்தில் அது சரி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடகொரிய விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.