பச்சோந்தி கூட அப்பப்போ தான் நிறம் மாறும். நாங்க எப்போ வேண்டுமானாலும் நிறம் மாறுவோம்.”

 

பச்சோந்தி கூட அப்பப்போ தான் நிறம் மாறும். நாங்க எப்போ வேண்டுமானாலும் நிறம் மாறுவோம்.”

ஐயா சொல்லுவது கேட்கவில்லையா?

கண் தெரியாது, காது கேட்காது, சற்று தூரம் நடக்க முடியாது. ஒழுங்காக பேச “கருமத்தை” விட்டால் வேறு எதுவும் தெரியாது. நாக்கு பிரட்டும் பேச்சுக்கள்.

ஆனால் தனக்கென்ன இலாபம் என தேடி ஓடி பதவிக்காக இனத்தை விலை பேசி கால் பிடிக்கும் நரித்தனத்தில் மக்களை ஏமாற்றுவதற்கு மூளை மட்டும் நன்றாக வேலை செய்யும்.

“போய் வா மகனே” என மகிந்தவை மக்கள் வாக்கு துணையோடு வீட்டுக்கு அனுப்பியவர் இன்று “ஹொந்தை மாத்தையா… மம ஓயாகே யாளுவ தமை (நல்லது தலைவா.. நான் உன் நண்பன் தான்) என்று பல்லிளித்து பதவிக்கு பேரம் பேசுகிறார்.

கட்டையில போற வயதிலயும் விற்று பிழைக்கும் சிந்தை.

இனப்படுகொலையாளிகளை அடையாளம் காட்டாது இருக்கும் இரண்டகமே பெரும் குற்றம். இப்போ அவர்களோடு கூட்டு சேர பல்லிளித்து ஒட்டி கொள்ளும் இரண்டகத்திற்கு மக்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?

இவர்களுக்கு வாக்களித்து விட்டு பலியாகும் வெள்ளாட்டு மந்தைகளாக எங்கள் ஈழ தமிழ் மக்கள்.. என்று அவர்கள் வாழ்வு விடியுமோ?