நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக கண்ணிவெடியால் பாதிப்படைந்த குடும்பத் தலைவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் சேட் நிறுவனத்தின்  திட்டங்களின் ஒரு பகுதியாக இன்று வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இருவருக்கு வாழ்வாதாரத்திற்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவைச்சேர்ந்த ஆர் .எம் .சந்திரராசா, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஆனந்தராசா பாலசரஸ்வதி ஆகியோருக்கு இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேட் நிறுவனத்தின் உள சமூக நிகழ்ச்சித்திட்டத்தினைச் செயற்படுத்தும் களப்பணியாளர்களும், மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு செயற்திட்ட பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்கள், ஆபத்துக்களைத் தவிர்த்தல் தொடர்பிலும் சேட் நிறுவனம் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருவதோடு கடந்த வருடம் விபத்தால் பாதிப்படைந்த குடும்பத் தலைவர்கள் நால்வருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.