ஊக்­க­ம­ருந்து சர்ச்­சையில் சிக்­கிய இந்­திய தட­கள வீராங்­கனை பிரி­யங்­கா­வுக்கு 8 ஆண்­டுகள் விளை­யாட தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய தட­கள வீராங்­க­னை­யான 29 வய­தான பிரி­யங்கா பன்வார் கடந்த 2014-ஆம் ஆண்டு நடை­பெற்ற ஆசிய விளை­யாட்டுப் போட்­டியில் 4 x 400 மீற்றர் தொடர் ஓட்­டத்தில் தங்­கப்­ப­தக்கம் வென்­றி­ருந்தார்.

கடந்த ஆண்டு இவர் 2-ஆவது முறை­யாக ஊக்­க­ம­ருந்து சர்ச்­சையில் சிக்­கினார்.

இதை­ய­டுத்து தேசிய ஊக்­க­ம­ருந்து தடுப்பு கழ­கத்தின் ஒழுங்கு நட­வ­டிக்கை குழு விசா­ரணை நடத்தி நேற்று முடிவை அறி­வித்­தது.

இதன்­படி பிரி­யங்­கா­வுக்கு 8 ஆண்­டுகள் விளை­யாட தடை விதிக்கப்­பட்­டுள்­ளது. கடந்த 2016ஆ-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்­கி­டப்­படும்.

இதன்மூலம் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.