உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருக்கும் போகம்பரை சிறைக் கைதிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சரவை நியமித்துள்ளன.

போகம்பரை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உட்பட 30 கைதிகள் நேற்று (15) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரண தண்டனைக் கைதிகள் தமது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறும், ஆயுள் தண்டனைக் கைதிகள் தமது தண்டனையை 20 வருடங்களாகக் குறைக்குமாறும் கோரியே இப்போராட்டத்தில் இறங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீயுயர் நீதிமன்ற நீதிபதிகள் அங்கம் வகிக்கும் இந்தக் குழுவினர், சிறைக் கைதிகளின் கோரிக்கைகள் குறித்த முழு அறிக்கையையும் தயாரித்து நீதியமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.