கதிர்காமம் புத்தள வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதோடு மேலும் 9 படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தள மற்றும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for கோர விபத்து

கெப் ரக வாகனமொன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 93 வயதுடைய வயோதி பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.