வாடகை முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பெட்டியை பொறுத்த வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான கால அவகாசம் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் முதலாம் திகதி வரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் கால அவகாசத்தை நீடித்துள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோந்தாகொட தெரிவித்தார்.

மேலும் வாடகைக்கு விடப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் பெட்டி பொறுத்துதல் தொடர்பான அமைச்சரவையின் முடிவுகளுக்கு முச்சக்கர வண்டி சாரதிகளிடமிருந்து சாதகமான கருத்துக்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிசிர தெரிவித்தார்.