அத்­துடன் பொது வேட்­பா­ள­ராக அப்பா கள­மி­றங்­கிய போது அவரை ஜனா­தி­ப­தி­யாக பார்க்க வேண்டும் என்­ப­தனை பார்க்­கிலும் அப்­பாவின் இலக்கை வெற்­றிக்­கொள்ள வேண்டும் என்­பதே எங்­க­ளு­டைய நோக்­க­மாக இருந்­தது. இதன்­படி எமது உயி­ரையும் பணயம் வைத்து அப்­பாவின் வெற்­றிக்­காக பாடு­பட்டோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மகள் சத்­து­ரிகா சிறி­சேன எழு­திய ஜனா­தி­பதி அப்பா என்ற நூல் வெளி­யீடு நேற்று பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­சேத மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதன்­போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 2015 ஆம் ஆண்டும் எனது அப்பா அதி­ர­டி­யாக தீர்­மானம் எடுத்து வெளி­யே­றினார். அப்­பாவின் தீர்­மானம் சரி­யா­னதா?  பிழையா? என்­பது எமக்கு தெரி­யாது. அப்பா எடுத்து தீர்­மா­னத்தை கண்டு நாம் திகைத்து போனோம். அப்பா பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கினார் .

இந்த சூழலில் நாம் அச்­சத்­து­டனே இருந்தோம். இருந்­த­போ­திலும் அப்­பாவின் பய­ணத்­திற்கு எந்த அச்­ச­மான நிலைமை வந்­தாலும் தைரி­ய­மாக அப்­பாவின் இலக்கை நோக்­கிய பய­ணத்­திற்கு உறு­து­ணை­யான இருக்க வேண்டும் என எமது குடும்­பத்­த­வர்கள் அனை­வரும் ஒன்று கூடி தீர்­மா­னித்தோம்.

இதன்­படி நாம் எமது குடும்­பத்தின் உயிரை பணயம் வைத்து அப்­பாவின் வெற்­றிக்­காக பாடு­பட்டோம். எனினும் அவரை ஜனா­தி­ப­தி­யாக ஆக்க வேண்டும் என்­பது நோக்­க­மல்ல. அவ­ரு­டைய இலக்கை வெற்­றி­ய­டைய செய்ய வேண்டும் என்­பதே எமது நோக்­க­மாக இருந்­தது.எனது அப்பா உயி­ரையும் மதிக்­காமல் தைரி­ய­மாக செயற்­பட்டார்.

அத்­துடன்  அர­சி­ய­லுக்கு வருவீர்களா என என்னை பார்த்து பலர் கேட்கின்றனர். எனினும் நான் அரசியலுக்கு நுழையும் நோக்கமில்லை. வாழ்நாள் முழுவதும் சுயமாக என்னுடைய சேவை மாத்திரம் நாட்டிற்கு செய்வேன் என்றார்.