மகளிர் அணி கிரிக்கட் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை அவசியம்!

147
இலங்கையின் மகளிர் கிரிக்கட் அணி வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெற முனைந்ததாக கூறப்படும் அதிகாரிகள் குறித்து விசாரணைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது.
sl-cricket-women

ஜே.வி.பி. யின் பெண்கள் பிரிவு இந்தக் கோரிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயிடம் விடுத்துள்ளது.

ஜே.வி.பி பெண்கள் அணியின் உதவி தலைவர் சமன்மாலி குருசிங்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், அது மகளிர் கிரிக்கட் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று சமன்மாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிக்கட் மற்றும் ஏனைய விளையாட்டுக்கள் இலங்கைக்கு கீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அந்த கீர்த்தியை பாதிக்கும் என்றும் சமன்மாலி குறிப்பிட்டுள்ளார்

 

SHARE