கனடாவை சேர்ந்த பெண் ஒருவரின் மார்பகங்கள் தெரியும் புகைப்படத்தை வெளியிட்ட கூகுள் நிறுவனத்தின் மீது, அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

137

 

கனடாவை சேர்ந்த பெண் ஒருவரின் மார்பகங்கள் தெரியும் புகைப்படத்தை வெளியிட்ட கூகுள் நிறுவனத்தின் மீது, அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கனடாவின் மொன்றியல் (Montreal) நகரில் உள்ள மரியா பியா கிரில்லோ (Maria Pia Grillo) என்ற பெண் தனது வீட்டின் முன்பு மார்பகங்கள் தெரிவது போல் குறைந்த ஆடைகளை மட்டும் அணிந்து அமர்ந்திருந்தார்.

இதனை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ (Google map street view) கமெரா ரகசியமாய் படம் பிடித்துக் காட்டி ஒளிபரப்பியுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண், கூகுள் நிறுவனத்தால் தனது மானம் போய் விட்டதாகவும், தான் மனவுளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறி, தனக்கு மான நஷ்டமாக 45,000 டொலர்கள் வழங்குமாறு மொன்றியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூகுள் நிறுவனத்தின் செயல் தவறு என்பதை ஒப்புக்கொண்டாலும், மரியா மனவுளைச்சலுக்கு ஆளாகினார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளது.

எனவே அவருக்கு 2250 டொலர்களை வழங்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு அந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE