59 வீடுகளில் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

143

 

கனடாவில் உள்ள சென்ட்ரல் எடோபிகோக் என்ற பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் 59 வீடுகளில் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டொரண்டோவை சேர்ந்த 32 வயதான அனிப் பிட்ரோ பர்ட்டன் (Anieph Fitzroy Burton ) என்ற நபர் மீது 95 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 11 பிரிவுகள் பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த இவருடைய 31 வயது மனைவி ஜெகனாரி பீட்டனும் ( Jehanneiry Beaton) செய்யப்பட்டு அவர் மீது ஆறுவித பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர், பெரும்பாலும் தனது குற்றங்களை அதிகாலை நேரத்தில்தான் செய்துள்ளதாகவும், மேலும் அவர் Bloor Street, The Queensway , Royal York Road போன்ற பகுதியில்தான் அதிகளவு குற்றங்களை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE